உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக கோப்பை ரோல்பால் போட்டி; தங்கம் வென்ற கோவை அணிகள்

உலக கோப்பை ரோல்பால் போட்டி; தங்கம் வென்ற கோவை அணிகள்

கோவை; கென்யாவில் நடந்த உலக கோப்பை ரோல்பால் போட்டியில் கோவை வீரர், வீராங்கனைகளின் அபார ஆட்டத்தால், இந்திய அணி இரு பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளது.கென்யா நாட்டில் ரோல்பால் உலக கோப்பை-2025 போட்டி, ஆறு நாட்கள் நடந்தது. இதில், இந்தியா, இலங்கை உட்பட, 10 நாடுகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நம் நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் முதல் முறையாக நடந்த ஜூனியர் பிரிவு போட்டியில் பங்கேற்றனர்.ஜூனியர் மாணவர்களுக்கான போட்டியில், அரையிறுதியில் இலங்கை அணியை எதிர்கொண்ட நம் வீரர்கள், 21-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப்போட்டியில் கென்யா அணியுடன் மோதிய நம் அணியினர், 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினர்.அதேபோல், இந்திய ஜூனியர் மாணவியர் அணியினர், கென்ய அணியினரை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டனர். சுறுசுறுப்புடன் விளையாடிய நம் வீராங்கனைகள், 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பையை வென்றனர்.கோவை வீரர், வீராங்கனைகளான தீக்சனா ஸ்ரீ, ரோஹித், வியாஷ் ஆகியோர் இரு பிரிவுகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். வீரர் வியாஷ் சிறந்த விளையாட்டு வீரர் விருதினை பெற்றார். வீரர் ரோஹித் அணியின் கேப்டனாக வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். வெற்றி வீரர்களை கோவை மாவட்ட ரோல்பால் சங்க செயலாளரும், தலைமை பயிற்சியாளருமான ராஜசேகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை