மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் மார்ச் 23ல் கிராம சபைகூட்டம்
17-Mar-2025
பெ.நா.பாளையம்; உலக தண்ணீர் தினத்தை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 9 ஊராட்சிகளில் இம்மாதம், 29ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிளிச்சி, நாயக்கன்பாளையம், குருடம்பாளையம், அசோகபுரம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் ஊராட்சிகளில் இம்மாதம், 29ம் தேதி உலக தண்ணீர் தினத்தை ஒட்டி காலை, 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது.கூட்டத்தில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, நீர் ஆதாரங்களை காப்பது உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக கிராம சபை செயலியில் பதிவேற்றம் செய்வது, கூட்ட நடவடிக்கை குறித்த ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஊராட்சியிலும், எந்த இடத்தில் நடைபெறும் என்பதை பொதுமக்களுக்கு முன்கூட்டியே துண்டு பிரசுரங்கள் வாயிலாக அறிவிக்கவும், மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது.
17-Mar-2025