உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து முன்னணி சார்பில் பூவோடு எடுத்து வழிபாடு

ஹிந்து முன்னணி சார்பில் பூவோடு எடுத்து வழிபாடு

ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, ஹிந்து முன்னணி சார்பில், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை நகர் ஹிந்து முன்னணி சார்பில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆனைமலை மாரியம்மன் கோவிலில் இருந்து மாசாணியம்மன் கோவிலுக்கு பூவோடு எடுத்துச் சென்று வழிபாடு செய்தனர். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ