உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மஞ்சள் அம்மன் சிலை பிரதிஷ்டை

மஞ்சள் அம்மன் சிலை பிரதிஷ்டை

நெகமம்; நெகமம், மெட்டுவாவி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மஞ்சள் அம்மன் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடந்தது.நெகமம், மெட்டுவாவி தர்ம சாஸ்தா கோவிலில், மஞ்சள் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், மூர்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள் தலைமையில், சிவ கைலாய வாத்தியத்துடன், 108 சங்காபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சுவாமிக்கு, 27 திரவியங்கள் கூடிய சிறப்பு அபிஷேகம், அலங்கார மற்றும் தீபாராதனை மற்றும் பக்தர்கள் பஜனை நடந்தது. இதில், மெட்டுவாவி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !