உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யோகா என்பது வாழ்க்கை முறை

யோகா என்பது வாழ்க்கை முறை

கோவை; ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் தேசிய சேவை திட்ட அணி மற்றும் கிணத்துக்கடவு மனவளக்கலை ஆழியார் அறிவுத் திருக்கோவில் இணைந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான 10 நாள் யோகா பயிற்சி முகாமை நடத்தின. ரத்தினம் கல்விக் குழும முதன்மை செயல் அலுவலர் மாணிக்கம் பேசுகையில், ''யோகம் என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடலையும் மனதையும் வளப்படுத்தும் வாழ்க்கை முறை,'' என்றார். மாணவர்களின் உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஒழுக்கம் மற்றும் முழுமையான வாழ்க்கை முறை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் முகாம் நடத்தப்பட்டது. தினமும் காலை, மதியம் என சுமார் ஆயிரத்து 800 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு யோகக்கலை குறித்த புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரத்தினம் கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !