மேலும் செய்திகள்
ஊரக திறனாய்வு தேர்வு 3,593 மாணவர்கள் பங்கேற்பு
08-Dec-2025
கோவை: அரசுப் பள்ளிகளில், 2025 - 2026ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜன., 31ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும், 1000 மாணவர்களுக்கு (500 மாணவர்கள், 500 மாணவியர்) மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். 9 மற்றும் 10ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங் களில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில், தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும். முதல் தாளில் கணிதம் 60 வினாக்கள்; இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய 60 வினாக்கள் கேட்கப்படும். www.dge.tn.gov.inஇணையதளத்தில், விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 26க்கு ள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
08-Dec-2025