உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு வங்கி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு வங்கி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை; தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கலெக்டர் அறிக்கை: உதவியாளர், மேற்பார்வையாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு மாநிலம் முழுவதும் 2,513 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணைய தளமான rcs.tn.gov.inமூலம் சமர்ப்பிக்கலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் துவங்கியுள்ளது; ஆங்கிலம், தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் இணைய விருப்பமுள்ளவர்கள், https://tamilnaducareerservices.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சேர விருப்பம் உள்ளவர்கள் மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரடியாக செல்லலாம் அல்லது gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை