அக்., மாத மின் கட்டணமே இந்த மாதமும் செலுத்தலாம்
கோவை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சீரநாயக்கன்பாளையம் அலுவலகம், தொண்டாமுத்துார் பிரிவுக்கு உட்பட்ட காளியண்ணன் புதுார், தென்னம்மநல்லுார் மற்றும் முத்திப்பாளையம் பகுதிகளில் தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இப்பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், அக்டோபர் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே டிசம்பர் மாதத்துக்கும் செலுத்தலாம் என, சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.