உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாலுகா அலுவலகத்தில் இன்றும் நாளையும் மனு தரலாம்

தாலுகா அலுவலகத்தில் இன்றும் நாளையும் மனு தரலாம்

கோவில்பாளையம்; அன்னூர் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி இன்றும், நாளையும், நடக்கிறது. வருவாய் துறை சார்பில், ஜமாபந்தி, அன்னூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று துவங்கியது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (21ம் தேதி), அன்னூர் வடக்கு உள் வட்டத்தைச் சேர்ந்த, ஆம்போதி, குப்பனூர், கணுவக்கரை, அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், பசூர், அ. மேட்டுப்பாளையம், அல்ல பாளையம், கஞ்சப்பள்ளி, ஒட்டர் பாளையம், பொகலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு தரலாம். 'நாளை (22ம் தேதி), எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, இடிகரை பேரூராட்சி மற்றும் கொண்டையம் பாளையம், அத்திப்பாளையம், அக்ரஹர சாமகுளம், கீரணத்தம், கள்ளிப்பாளையம், வெள்ளமடை, வெள்ளானைப்பட்டி ஆகிய ஏழு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு தரலாம்,' என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !