வாழ்க்கை கல்வியை நீங்கதான் கொடுக்கணும்!
பள்ளி தேர்வுகள் முடியப்போகின்றன. கோடை விடுமுறையும் துவங்கப்போகிறது. விடுமுறையில் அந்த பயிற்சி, இந்த பயிற்சி என அனுப்பும் முன், வாழ்க்கைக் கல்விக்கான சில பயிற்சிகளை கற்றுக்கொடுத்து விட வேண்டும்.n பள்ளிக்கு செல்லும் நாட்களில் வழக்கமாக, 6 அல்லது 7 மணிக்கு எழுந்திருக்கும் குழந்தைகளை, லீவு தானே, துாங்கட்டும் என விட்டு விடாதீர்கள். அப்படியே விட்டால், பள்ளி ஆரம்பிக்கும் போது, குறிப்பிட்ட நேரத்தில் எழ சிரமப்படுவார்கள்.n லீவு துவங்கியவுடன் முதலில், தாத்தா, பாட்டி வீட்டுக்கு, குழந்தைகளை அழைத்து செல்லுங்கள். பெற்றோர் கற்றுத் தராத உலகத்தை, தாத்தா, பாட்டி கற்றுத் தருவார்கள். வீட்டிலேயே தாத்தா, பாட்டி இருந்தால் பல்கலைக்கழகம்தான்.n அடுத்து, வீட்டில் சின்ன, சின்ன வேலைகளை செய்யச் சொல்லி கற்றுக் கொடுங்கள். தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றுவதாக இருக்கட்டும், அலமாரிகளை ஒழுங்குபடுத்துவதாக இருக்கட்டும்.n நுாலகத்துக்கு சென்று, குழந்தைகளை உறுப்பினராக்குங்கள். குழந்தைகளுக்கு தோதான புத்தகங்களை, அவர்களையே எடுத்து படிக்கச் சொல்லுங்கள்.n மளிகை கடைக்கு செல்கிறீர்களா. பட்டியல் கொடுங்கள். குழந்தைகளையே பொருட்களை எடுக்கச் சொல்லுங்கள். பணத்தையும் அவர்களிடம் கொடுத்து, 'பில்' கட்டச் சொல்லுங்கள். எவ்வளவு பாக்கி வாங்க வேண்டும் என்று, அவர்கள் கணக்கு போடட்டும்.இதெல்லாம் ஒரு பருக்கை தான். யானைக்கு வேண்டுமானாலும் ஒரு பருக்கை சிறியதாக இருக்கலாம்; ஆனால் எறும்புக்கு?