மேலும் செய்திகள்
தகராறு இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு
05-Jan-2025
கோவை; கோவை, புலியகுளம் சீர்காழி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருக ராஜ், 45; தபால்காரர். இவர் தனது குலதெய்வ கோவிலான, சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சண்முகா நகர் கருப்பராயன் கோவிலையும் பராமரித்து வருகிறார்.கோவிலில் சூரிய ஒளி பேனல்களில் இருந்த, தாமிர வயர்கள் திருட்டு போயிருந்தன. முருகராஜ் ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். அதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலந்துாரை சேர்ந்த பாக்கியராஜ், 26 என்பவர் கோவிலில் திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
05-Jan-2025