உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2வது திருமணத்துக்கு கண்டிப்பு; வாலிபர் தற்கொலை

2வது திருமணத்துக்கு கண்டிப்பு; வாலிபர் தற்கொலை

கோவை; இரண்டாவது திருமணம் செய்ததை முதல் மனைவி கண்டித்ததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.கோவை ஒண்டிப்புதூர் எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டை சேர்ந்தவர் கார்த்திக், 30; தனியார் நிறுவன ஊழியர். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சில வாரங்களுக்கு முன் கார்த்திக் ஒரு பெண்ணை திருமணம் செய்து, வீட்டுக்கு அழைத்து வந்தார். இதற்கு முதல் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இருப்பினும் கார்த்திக், இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முதல் மனைவிக்கும், கார்த்திக்கிற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.கோபமடைந்த முதல் மனைவி, வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மனஉளைச்சலில் இருந்த கார்த்திக், தனது அறையில் துாக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை