வாசகர்கள் கருத்துகள் ( 2 )
They will give 3-5 lakhs. Is it sufficient in this world?
கொஞ்சம் கூட சமூக உணர்வு இல்லாமல், பேருந்தின் கதவு திறந்த நிலையிலேயே பெரும்பாலும் இயக்கப்படுகிறது . இதனால் ஏற்பட்டது தான் இந்த இழப்பு
கோவை: கோவை டவுன்ஹால், ஹாஜி முகமது வீதியை சேர்ந்தவர் உமர் நாபிக், 31. சிவில் இன்ஜினியர். இவர் நேற்று இரவு, பழைய மீன் மார்க்கெட் பகுதியில், சாலை ஓரத்தில் நண்பரிடம் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது, செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி, தனியார் டிராவல்ஸ் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சின், லக்கேஜ் வைக்கும் பகுதியில், திறந்த நிலையில் இருந்த ஒரு கதவு உமர் நாபிக் தலையில் மோதியது. இதில், படுகாயமடைந்த உமர் நாபிக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வெரைட்டிஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்,விசாரணை நடத்தி வருகின்றனர்.
They will give 3-5 lakhs. Is it sufficient in this world?
கொஞ்சம் கூட சமூக உணர்வு இல்லாமல், பேருந்தின் கதவு திறந்த நிலையிலேயே பெரும்பாலும் இயக்கப்படுகிறது . இதனால் ஏற்பட்டது தான் இந்த இழப்பு