உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனம் மோதி வாலிபர் மரணம்

வாகனம் மோதி வாலிபர் மரணம்

கோவை; கோவை வெள்ளலுார் குளத்தேரி ரோட்டை சேர்ந்தவர் அஜீத்குமார், 27; பெயின்டர். இவர் நேற்று முன்தினம், கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில், தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. தொடர்ந்து பின்னால் வந்த பைக்கும் விபத்தில் சிக்கியது.அஜீத்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் வந்த வாகனத்தை ஓட்டிய, கோவை எல்.ஜி., நகரை சேர்ந்த வினோத், 33 என்பவர் படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார், சரக்கு வாகன டிரைவர் பூமாகுமார், 45 என்பவர் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ