உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாலிபர் வெட்டிக் கொலை

வாலிபர் வெட்டிக் கொலை

மேட்டுப்பாளையம்; காரமடை ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார், 23. பால் வியாபாரி. திருமணம் ஆகாதவர். தனது தந்தை, தாய், தங்கையுடன் வசித்து வருகிறார். சஞ்சய் குமார், அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு அங்கு துாங்க சென்றார். நேற்று அதிகாலை அவரது அம்மா சஞ்சய் குமாரை எழுப்ப வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது, வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சஞ்சய் குமார் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !