மேலும் செய்திகள்
போதை மாத்திரை விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர்
20-Jun-2025
கோவை; விற்பனைக்காக போதை மாத்திரை வைத்திருந்த வாலிபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடகோவை பாலத்தின் கீழ்பகுதியில், சந்தேகத்துக்கு இடமான வகையில், நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தன. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த லெஞ்சாங்கம், 30 என்பதும், கோவை சிவானந்தா காலனியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது.அவர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, போதைக்காக இளைஞர்களை குறி வைத்து விற்றது தெரிந்தது. அவருடன் தொடர்புடைய நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். அவரிடமிருந்து, 36 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த பின், சிறையில் அடைத்தனர்.
20-Jun-2025