உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை தாக்கி இளைஞர் படுகாயம்

யானை தாக்கி இளைஞர் படுகாயம்

மேட்டுப்பாளையம் ;கோவை மாவட்டம் வெள்ளியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டை செட்டில்மென்ட் பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார், 23. தனது உறவினர்களுடன் நேற்று முன் தினம் பில்லூர் டேம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள புதரில், மறைந்திருந்த ஒற்றைக் காட்டு யானை மூவரையும் துரத்தியது. இதில் சதீஷ்குமார் மட்டும் யானையிடம் சிக்கினார். யானை அவரை தாக்கியதில், வயிற்றுப் பகுதியில் குடல் சரிந்து படுகாயம் அடைந்தார். அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி