கோவை;சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மண்டல அளவிலான தடகளப்போட்டியில், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகளப்போட்டிகள், சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.நேற்று நடந்த மாணவர்கள் பிரிவு மும்முறை தாண்டுதலில் அபின் முதலிடம், கோகுல்நாத் இரண்டாமிடம், அப்துல் சமத் மூன்றாமிடம் பெற்றனர்.200மீ., ஓட்டத்தில் சஞ்சய் முதலிடம், பாலகண்ணன் இரண்டாமிடம், முகேஷ் மூன்றாமிடம்; ஈட்டி எறிதலில் விகாஷ் முதலிடம், விக்னேஷ்வர் இரண்டாமிடம், ராஜா மூன்றாமிடம்; ஹேமர் எறிதலில், வினேஷ் முதலிடம், தமிழ்செல்வன் இரண்டாமிடம், சூர்யா ஸ்ரீ மூன்றாமிடம் பிடித்தனர்.மாணவியர் பிரிவு ஈட்டி எறிதலில், ஜனனி முதலிடம், சந்தியா இரண்டாமிடம், அர்ச்சனா மூன்றாமிடம்; 800மீ., ஓட்டத்தில் ஜனனி முதலிடம், சதீஷ்வரி இரண்டாமிடம், கவிதா மூன்றாமிடம் பிடித்தனர்.