உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விரும்பிய சரக்கு கிடைக்கவில்லையே என விரக்தி பக்கத்து மாவட்டத்திற்கு படையெடுக்கும் குடிமகன்கள்

விரும்பிய சரக்கு கிடைக்கவில்லையே என விரக்தி பக்கத்து மாவட்டத்திற்கு படையெடுக்கும் குடிமகன்கள்

திட்டக்குடி : திட்டக்குடி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள டாஸ்மாக் கடைகளில் விருப் பமான சரக்குகள் கிடைக்காததால் குடி மகன்கள் பக்கத்து மாவட்ட டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.திட்டக்குடி, பெண்ணாடம், ஆவினங்குடி, ராமநத்தம் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலையொட்டி இந்த கடைகளில் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு சரக்குகளை வாங்கி சப்ளை செய்து வருகின்றனர். வழக்கமாக அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டில் காசு என்று சொல்லி 5 ரூபாய் கூடுதலாக விற்கப்பட்டது. தற்போது லாரிகளிலிருந்து சரக்குகள் சப்ளை செய்யப்பட்ட இரண்டு, மூன்று மணி நேரத்திலேயே சில குறிப்பிட்ட வகை மதுபானங்கள் தீர்ந்து விட்டதாக கூறி அந்த வகை சரக்குகளை அரசு மற்றும் தனியார் பார்களுக்கு சப்ளை செய்கின்றனர். இந்த வகை சரக்குகள் அரசு பார்களில் 10 முதல் 15 ரூபாயும், தனியார் பார்களில் 20 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் சிலவகை சரக்குகள் போலியானவையாக உள்ளது என குடிமகன்கள் வருத்தப் படுகின்றனர். பீர் வகை மதுபானங்களும் பார்களுக்கு சப்ளை செய்யப்படுவதால் சரக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெண்ணாடம் பகுதி குடிமகன்கள் அருகிலுள்ள அரியலூர் மாவட்டத்திற்கும், ஆவினங்குடி, திட்டக்குடி, ராமநத்தம் பகுதி குடிமகன்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கும் படையெடுக் கின்றனர். மேலும் அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் அரசு நிர்ணயித்த விலைக்கே விற்பதால் வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு வழங்கி மகிழ்வித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ