உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிமா நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

அரிமா நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் சேவை திட்டங்கள் துவக்க விழா நடந்தது.விருத்தாசலம் மக்கள் மன்றத்தில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகர், பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.புதிய நிர்வாகிகளாக தலைவர் ரவி, செயலாளர் அம்பலநாதன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், அமிர்தலிங்கம் ஆகியோருக்கு முன்னாள் மாவட்ட ஆளுனர் கியான்சந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தும், அகர்சந்த் சேவைப்பணிகளை துவக்கி வைத்தும் பேசினர்.எழுத்தாளர் லேனா.தமிழ்வாணன் சங்க செயல்பாடுகளை வாழ்த்தி பேசினார். முத்துகுமார் எம்.எல்.ஏமுன்னாள் எம்.எல்.ஏகுழந்தைதமிழரசன், சங்க நிர்கவாகிகள் சண்முகம், பாலகிருஷ்ணன், ரமேஷ், அசோக்குமார்ஜெயின், ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ