உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெட்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

பெட்டி கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில் பெட்டி கடைக்காரரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் வாகிச நகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன், 62; இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.சிதம்பரம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராகுல், 28; கந்தமங்கலம் செல்லதுரை மகன் மூவேந்தன், 22; பழைய புவனகிரி சுரேந்தர் மகன் கவுசிலன், 23; மீதிகுடி பாக்கியராஜ் மகன் தேவராஜ், 17; இவர்கள் 4 பேரும், சர்புதீன் கடை முன் நின்று கொண்டு, கையில் கத்தியுடன், ஆபாசமாக பேசினர். தட்டிக்கேட்ட சர்புதீனை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து சர்புதீன் அளித்த புகாரின் பேரில், ராகுல், கவுசிலன், மூவேந்தன், தேவராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து ராகுல், கவுசிலன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முவேந்தன், தேவராஜ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.கத்தியை காட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !