பைக் திருடிய 3 வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு
கடலுார்: கடலுார் உழவர் சந்தை யில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மூன்று வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52; இவர் நேற்று காலை 9மணிக்கு காய்கறி வாங்க உழவர்சந்தைக்கு பைக்கில் வந்தார். காய்கறி வாங்கிவிட்டு திரும்பியபோது, தனது பைக்கை 3 வாலிபர்கள் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் பைக்கை திருடிச் சென்ற 3 வாலிபர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பைக் திருடியது பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர், 33; ஆனந்தராஜ், 28; கவுதம், 26; என தெரியவந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர்.