மேலும் செய்திகள்
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '12 ஆண்டு'
08-Aug-2024
கடலுார்: நெய்வேலி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், வடலுார், தென்குத்து கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் வெங்கடேசன், 30; வெல்டர். இவர் கடந்த 24.9.2021ல் குளித்துக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து வைத்துள்ளதாக கூறி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து, அவர் மீது கடலுார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
08-Aug-2024