உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திறந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை வீணாகும் சுகாதார நிலையம்

திறந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை வீணாகும் சுகாதார நிலையம்

பெண்ணாடம் அடுத்த கொசப்பள்ளம் ஊராட்சி, சின்னகொசப்பள்ளத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் மூலம் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சிகிச்சை பெற்று வந்தனர். நாளடைவில் பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி, சுகாதார நிலையம் பயன்பாடின்றி பூட்டப்பட்டது.இதனால் இப்பகுதி மக்கள் பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம், கணபதி குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதால் கர்ப்பிணிகள், பெண்கள், முதியோர், சிறுவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதையேற்று, 15வது நிதிக்குழு மானிய சுகாதார திட்டத்தில் புதிதாக துணை சுகாதார நிலையம் அமைக்க 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களுக்கு முன் மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்காமல் அவசரகதியில் திறக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.எனவே, சின்னகொசப்பள்ளத்தில் காட்சிப்பொருளான துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை