உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரும்பு வியாபாரியிடம் வழிப்பறி; ஆரோவில் அருகே பிரபல ரவுடி கைது

இரும்பு வியாபாரியிடம் வழிப்பறி; ஆரோவில் அருகே பிரபல ரவுடி கைது

வானுார்: ஆரோவில் அருகே வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் பெண்ணாடம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் பாபு,42; பழைய இரும்பு வியாபாரி. இவர் நேற்று முன்தினம் மாலை வியாபாரம் விஷயமாக பைக்கில் ஆரோவில் பகுதிக்கு வந்தார். அப்போது, மாலை 7;00 மணிக்கு இடையஞ்சாவடி-குயிலாப்பாளையம் சாலையில் நின்றிருந்த ஆசாமி ஒருவர் திடீரென பாபுவை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 4,200 பணம் மற்றும் அவர் அணிந்திருந்த மூன்று சவரன் செயினை பறித்து சென்றார்.இதுகுறித்து பாபு அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது பல்வேறு கொலை, கொலை முயற்சிகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான குயிலாப்பாளையம் லட்சுமிபுரத்தை சேர்ந்த காளி மகன் ராஜ்குமார், 39; என்பது தெரிய வந்தது.அதன்பேரில், பிரம்மதேசத்தில் பதுங்கியிருந்த ராஜ்குமாரை, இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை