மேலும் செய்திகள்
கூடலுாரில் எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
08-Oct-2026
மந்தாரக்குப்பம்: நெய்வேலியில், அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெய்வேலி கிளை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் அம்ப்ரோஸ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். அதில் முகவர்களுக்கு குறைக்கப்பட்ட கமிஷனை மீண்டும் வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். எல்.ஐ.சி., நேரடி சந்தைப்படுத்தலை நிறுத்த வேண்டும். எல்.ஐ.சி., பங்குகளை தனியாருக்கு வழங்கக் கூடாது. தனியாருக்கு வழங்கிய பங்குகளை மீண்டும் வாங்க கோரியும், முகவர்களுக்கு நலநிதி மற்றும் முறையான ஒய்வூதிய திட்டத்தை வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் குணா செபஸ்டியன். பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
08-Oct-2026