உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியில் கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெ.,பேரவை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் பங்கேற்று, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அ.தி.மு க., அரசு செய்த சாதனைகளை விளக்கி வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினார். கடலுார் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் வினோத், கோவிந்தராஜ், கமலக்கண்ணன், பாஷியம், மாவட்ட பொருளாளர் தேவநாதன், மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் குருநாதன், கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை