அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில், அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம் சார்பில், பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் கட்சி விளையாட்டு வீரர், வீராங்கனை குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் மணிமாறன், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.இதில், வடக்கு ஒன்றிய தொகுதி பொறுப்பாளர், ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.மாநில வர்த்தக பிரிவு துணை செயலாளர் சக்திவேல், ஜெ., பேரவை மாவட்ட இணை செயலாளர் குறிஞ்சிசெல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.