உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏ.எல்.சி., பேராயர் தேர்தல் மனு தாக்கல்

ஏ.எல்.சி., பேராயர் தேர்தல் மனு தாக்கல்

கடலுார் : ஆற்காடு லுாத்தரன் திருச்சபை (ஏ.எல்.சி.,) பேராயர் தேர்தலில் போட்டியிடும் பீட்டர் பால் தாமஸ், நேற்று கடலுார் ஏ.எல்.சி., மத்திய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.தமிழக முழுவதும் ஆற்காடு லுாத்தரன் திருச்சபை பேராயர் தேர்தல் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நேற்று திருச்சபை பேராயர் தேர்தலில் போட்டியிடும் பீட்டர் பால் தாமஸ், மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஏ.எல்.சி., தேவாலய வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கடலுார் ஏ.எல்.சி., மத்திய அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் அகிலன் அருண் குமார், ஜெயபால், பெரித்தா ஆகியோரிடம், பேராயர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி