உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா

அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தைதோப்பு அருகே உள்ள அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கடந்த மாதம் 25 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் நேற்று முன்தினம் மாலை தீமிதி திருவிழா நடந்தது. தொடர்ந்து நேற்று தேர்திருவிழா நடந்தது. அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை