மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலையில் நீர் மேலாண்மை கருத்தரங்கம்
08-Mar-2025
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், மதுரை ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சைன்சஸ் கல்லுாரி சார்பில் கப்பல் துறை சார்ந்த பணிகளை பெறுவதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறையில், மதுரை, ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சைன்சஸ் கல்லுாரி சார்பில், பொறியியல் படிப்பு முடிந்தபின், கப்பல் துறை சார்ந்த பணிகளுக்கு செல்வது குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.இதன் மூலம், கடல் துறை சார்ந்த பணியில், சேர்வதற்கான, படிக்க வேண்டிய படிப்பு, அதில் கிடைக்கும் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சைன்சஸ் கல்லுாரி பி.ஆர்.ஓ., சந்திரன் மூர்த்தி, கேப்டன் ஞான எடிசன்ராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறை இணை போராசிரியர் ரமேஷ், பேராசிரியர் ஜேம்ஸ் குணசேகரன், மின்னியல் துறை தலைவர் சிதம்பரம், வேலை வாய்ப்பு அதிகாரி கணபதி, டேனியல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சி மூலம், கப்பல் துறை சார்ந்த பணிகள் குறித்து மாணவர்கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
08-Mar-2025