நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
விருத்தாசலம்: விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருந்து பெற்ற, ஆசிரியர்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேகர் பாராட்டினார்.விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் ராசாபாளையம் அரசு நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் காசிநாதன், பண்ருட்டி அடுத்த செட்டிப்பட்டரை காலனி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் நளினா, மங்களூர் அடுத்த புலிகரம்பலுார் அரசு நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் வீரமணி, பண்ருட்டி அடுத்த வரிசாங்குப்பம் அரசு துவக்க பள்ளி ஆசிரியர் கோகுலகண்ணன், பெண்ணாடம் மேற்கு அரசு நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஹேமகுமாரி ஆகியோர் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றனர்.அவர்களை, விருத்தாசலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சேகர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.இதில், மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.