வீராணம் ஏரி நீரேற்று நிலையம் சட்டசபை குழுவினர் ஆய்வு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் வீராணம் ஏரியில் மெட்ரோ நிறுவனம் நீரேற்று நிலையத்தை சட்டமன்ற குழுக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கடலுார் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையிலான சட்டசபை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். உறுப்பினர்கள் செங்கம் கிரி. காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றனர்.நேற்று காலை, சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் மெட்ரோ நிறுவன அதிகாரிகாளிடம் விவரம் கேட்டனர்.வீராணம் ஏரியிலிருந்து தினமும் சென்னைக்கு அனுப்பப்படும் நீரின் அளவு, வடிகட்டு முறை மற்றும் ஏரியின் முழுகொள்ளவு, தற்போது தண்ணீரின் இருப்பு நிலை குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர்.ஆய்வின்போது சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், தாசில்தார் பிரகாஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி பொறியாளர்கள் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு படைகாத்தான், லால்பேட்டை சிவராஜ் மற்றும அலுவலர்கள், மெட்ரோ நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.