உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறுவட்ட விளையாட்டு போட்டி ஆவினங்குடி பள்ளி வெற்றி

குறுவட்ட விளையாட்டு போட்டி ஆவினங்குடி பள்ளி வெற்றி

திட்டக்குடி: ஆவினங்குடி அரசுப்பள்ளி மாணவர்கள் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.திட்டக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தொளார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவு கபடி போட்டியிலும், மாணவிகள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.மாணவிகள் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவு கபடி, 17 வயதிற்குட்பட்டோர் கோ-கோ போட்டிகளில் இரண்டாமிடம் பிடித்தனர். அவர்களை பள்ளி தலைமையாசிரியர் வேல்முருகன், உதவி தலைமையாசிரியர் ராமராஜன், உடற்கல்வி ஆசிரியர் முருகானந்தம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை