உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஆர்.கே., கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம் 

எம்.ஆர்.கே., கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம் 

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில், என்.எஸ்.எஸ்., -என்.சி.சி., -ஒய்.ஆர்.சி.,- ஆர்.சி.சி., மற்றும் சந்திரவதனம் இண்டேன் கிராமின் விட்ராக் சார்பில் எல்.பி.ஜி., வீட்டு சிலிண்டர் உபயோகிப்போரின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்தவேலு,நிர்வாக அதிகாரிகோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன்முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சித்திவிநாயகம் வரவேற்றார்.புதுச்சேரி எல்.பி.ஜி., கேஸ் விற்பனைப்பிரிவு துணை மேலாளர் சம்பத்குமார்ரெட்டி பங்கேற்று, வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார். இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.செஞ்சுருள் சங்க ஒருங்கணைப்பாளர் ராஜகணபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி