உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலுார் : கடலுாரில், பள்ளி மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கடலுார் மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் திருப்பாதிரிபுலியூர் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் இடையே ஜாதி மதம் வேற்றுமையை களைந்து ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு கூட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு எஸ்.ஐ., ஆறுமுகம், வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார்.பள்ளி மாணவர்களுக்கு சைபர் கிரைம், சிறார் பாலியல் வன்கொடுமை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள் பிரவனா, ரேகா, செலவகணபதி உள்ளிட்ட ஆசிரியர்கள், சமூகநீதி மனித உரிமைகள் பிரிவு போலீசார், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை