உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் பா.ம.க., மாவட்ட செயற்குழுக்கூட்டம்

நெய்வேலியில் பா.ம.க., மாவட்ட செயற்குழுக்கூட்டம்

நெய்வேலி: நெய்வேலியில் பா.ம.க.,வின் கடலுார் வடக்கு மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19 ல் உள்ள என்.எல்.சி., - பா.தொ.ச., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், முன்னாள் மாவட்ட செயலர்கள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், என்.எல்.சி., பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் செல்வராஜ் அலுவலக செயலாளர் முருகவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் சிவகாமி முன்னிலை வகித்தனர். நெய்வேலி தெற்கு நகர செயலாளர் சார்லஸ் வரவேற்றார். கூட்டத்தில், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பது. இனிவரும் காலங்களில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரின் வழிகாட்டுதல்படி பா.ம.க.,வின் அரசியல் மற்றும் சமூக பணிகளை ஓய்வின்றி உற்சாகத்தோடு செய்வதென உறுதியேற்பது, பா.ம.க.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி