மேலும் செய்திகள்
நடுக்கடலில் படகில் தீ 20 மீனவர்கள் தப்பினர்
01-Mar-2025
கடலுார் : கடலுார் துறைமுகத்தில் படகு தீப்பிடித்து எரிந்து சேதமானது.கடலுார், தேவனாம்பட்டிணத்தை சேர்ந்தவர் சுரேஷ்,47; இவர் தனது பைபர் படகை, கடலுார் துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைத்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இவரது படகு மர்மமான முறையில் தீப்பிடித்தது எரிந்தது.அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், கடலுார் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் தீ விபத்தில் படகு மற்றும் மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து கடலுார், துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Mar-2025