உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

திட்டக்குடி: ராமநத்தம் அருகே கள்ளத்தனமாக அரசு மதுபாட்டில்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ராமநத்தம் சப்இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மா.புடையூரைச் சேர்ந்த தண்டபாணி,61, என்பவர் அவரது வீட்டின் முன்பு கள்ளத்தனமாக அரசு மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்து 400ரூபாய் ரொக்கம் மற்றும் 28மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து, தண்டபாணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை