உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய்ப்பால் வார விழா

தாய்ப்பால் வார விழா

கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமம் சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது.டாக்டர் தம்பையா தலைமை தாங்கினார். மண்டல துணை ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கம் தலைவர் நாராயணசாமி, பிறந்த குழந்தைகளின்தாய்மார்களுக்கு ஊட்டசத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கி பேசினார்.சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், நிலைய மருத்துவ அதிகாரி கவிதா, குழந்தைகள் நல மருத்துவர் குமார் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் ஞானசேகரன், உறுப்பினர்கள் வேல்முருகன், முருகன், சகாயராஜன், பாலா, சூரியமூர்த்தி, ராமச்சந்திரன், உமாசுதன், புனிதாபாரத், ஜெயபிரகாஷ், இளங்கோவன், ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரவிச்சந்திரன் செய்திருந்தார்.செயலாளர்கார்த்தீசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை