உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகர பகுதி விவசாயிகளுக்கு மத்திய அரசு கவுரவ நிதி

நகர பகுதி விவசாயிகளுக்கு மத்திய அரசு கவுரவ நிதி

நெல்லிக்குப்பம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால் நெல்லிக்குப்பம் நகர பகுதி விவசாயிகளுக்கு மத்திய அரசின் கவுரவ நிதி நிலுவை தொகையுடன் அளிக்கப்பட்டது.மத்திய அரசு விவசாயிகளுக்கு கவுரவ நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 முறை என ஆண்டுக்கு 6 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.இந்த திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, நகர பகுதி விவசாயிகள் பதிவு செய்ய முடியவில்லை. அதேபோல் ஆதார் அட்டைபோல் ஒவ்வொரு விவசாயிக்கும் தனி குறியீடு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இரு திட்டத்திலும் நகர பகுதி விவசாயிகள் சேர முடியாத நிலை உள்ளதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதைத் தொடர்ந்து, அண்ணா கிராமம் வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் முயற்சியால், நெல்லிக்குப்பம் நகர பகுதி விவசாயிகளுக்கு 8 நிலுவை தொகையுடன் மத்திய அரசின் கவுரவ நிதி கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் விவசாயிகளுக்கு தனி குறியீடு எண் அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி