உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயின் பறிப்பு ஆசாமி கைது

செயின் பறிப்பு ஆசாமி கைது

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூரில், பெண்ணிடம் செயினை பறித்து சென்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.கடலுார் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த விஜயா,51, என்பவர், கடந்த மாதம் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்றார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த தினேஷ்பாபு,43, என்பவர் செயினை பறித்து சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், செயினை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை