பெரியகாட்டுப்பாளையத்தில் முதல்வர் திட்ட முகாம்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மேலிருப்பு, செம்மேடு, தாழம்பட்டு, கீழிருப்பு, கருக்கை, நடுக்குப்பம் ஆகிய கிராமங்களுக்காக நடந்தது. முகாமிற்கு ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆனந்த், பி.டி.ஒ.சங்கர், டாக்டர் அறிவொளி, துணை வேளாண் அலுவலர் ராஜ்குமார், துணை பி.டி.ஒ., தேன்மொழி முன்னிலை வகித்தனர். முகாமை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஜெகன்நாதன், பரமதேவன், தனபதி, தினகரன், தமிழ்செல்வன், ஜோதிலிங்கம், சத்தியராஜ், ஊராட்சி தலைவர்கள் சண்முகம், தீபாதேவி, அமிர்தலிங்கம், வீரப்பன், கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.