உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அழிச்சிக்குடி ஊராட்சியில் முதல்வர் பிறந்த நாள் விழா

அழிச்சிக்குடி ஊராட்சியில் முதல்வர் பிறந்த நாள் விழா

புவனகிரி: அழிச்சிக்குடி ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., கொடியேற்றி, மரக்கன்று நடப்பட்டது. புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி, வண்டுராயன் பட்டு, பெரியமேடு, நாலாந்தெத்து பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆத்ம திட்ட இயக்குனர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். இளைஞரணி துணை செயலாளர் கவுதமன் வரவேற்றார். அரசு வழக்கறிஞர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி மணிராஜன், தொ.மு.ச., தலைவர் ராஜாராமன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மதியழகன் கட்சி கொடி ஏற்றினார். வண்டுராயன்பட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து முன்னாள் ஊராட்சித் தலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி மரக்கன்றுகள் நட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பாஸ்கர், பாலமுருகன், மணிவண்ணன், மனோபாலா மூத்த நிர்வாகிகள் ராமசாமி, லட்சுமணன், கோபாலகிருஷ்ணன், சமூக ஊடக ஒன்றிய செயலாளர் குமரமணி, நிர்வாகிகள் மணிவேல், சிவச்சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் இளையராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி