உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் திட்ட முகாம்

முதல்வர் திட்ட முகாம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. தாசில்தார் ஆனந்த் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சரசு தெய்வசிகாமணி வரவேற்றார். ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் முகாமை துவக்கி வைத்து மனுக்கள் பெற்றார்.கர்ப்பிணி பெண்களுக்கு 'கிட்' , கலைஞர் கனவு இல்ல திட்ட பணி ஆணை வழங்கல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 760 பேர் மனுக்கள் வழங்கினர்.மருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மண்டல துணை பி.டி.ஒ., தேன்மொழி துணை தாசில்தார்கள் கிருஷ்ணா, தேவநாதன், பாலமுருகன், முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், ஊராட்சி தலைவர்கள் ராமசந்திரன், வடிவுக்கரசி, முருகன், ஒன்றிய கவுன்சிலர் தேவராசு, ஜெகஜீவன்ராம், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ