உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சோழன் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்

சோழன் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்

கடலுார்: சென்னையில் இருந்து கடலுார் வழியாக திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் 6 நாட்களுக்கு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து கடலுார்– சிதம்பரம் மார்க்கமாக திருச்சி வரை சோழன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்–22675) வழக்கமாக இயக்கப்படுகிறது. இதற்கிடையே, இன்று (5ம் தேதி), வரும் 12, 14, 21, 26, செப்., 9 ஆகிய தேதிகளில் சென்னை–திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் கடலுார்–சிதம்பரம் மார்க்கத்ததில் இயக்குவதற்கு பதிலாக கடலுார்– விருத்தாசலம் மார்க்கமாக திருச்சி வரை இயக்கப்படுகிறது. இத்தகவலை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை