பண்ருட்டி அண்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் வகுப்புகள் துவக்கம்
பண்ருட்டி: பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்லுாரி கலை அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கி பொறியியல் கல்லுாரியில் உள்ள படிப்புகள், உயர் கல்வி வசதிகள், தொழில் நுட்ப மையங்கள் குறித்தும் விளக்கி பேசினார்.விழாவில் ஓய்வு பெற்ற என்.எல்.சி., மேலாளர் செந்தில்குமார் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பேசினார்.விழாவில் அனைத்து துறைதலைவர்கள்,பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் 200பேர் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.