மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
30-Aug-2024
சிறுபாக்கம் : 'முதல்வர் ஸ்டாலின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சிறந்த ஆட்சி செய்து வருகிறார்' என அமைச்சர் கணேசன் பேசினார்.மங்களூர் வடக்கு தி.மு.க., ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் அடரியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார்.சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., இளைஞரணி நிர்வாகி நிர்மல் வரவேற்றார்.தி.மு.க., நிர்வாகிகள் ராமதாஸ், வெங்கடேசன், பழனிவேல், சுப்ரமணியன், வேலாயுதம், பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் பாப்பாத்தி ராமலிங்கம், செல்வராணி நிர்மல் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசுகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன், தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். மாணவர்கள், விவசாயிகள், மாற்று திறனாளிகள், மகளிர் உட்பட அனைத்து தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனர்.மகளிர், மாணவர்கள் உதவித்தொகை, கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சிறந்த முதல்வராக ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார்' என்றார்.
30-Aug-2024