உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கம்யூ., ஆர்ப்பாட்டம்

கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் தலைமை தபால்நிலையம் அருகே கம்யூ.,கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல், உரம் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்டசெயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு கண்ணன், மார்க்சிஸ்ட்(லெனினிஸ்ட்) மாவட்டசெயலாளர் ராஜசங்கர் கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு தனவேல், மா.கம்யூ., உதயகுமார், ராஜேஷ்கண்ணன், அமர்நாத், வாஞ்சிநாதன், இந்திய கம்யூ.,நகர செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பெட்ரோல், டீசல், உரம், காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், திரும்ப பெறக்கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !