புகார் பெட்டி
வாரச்சந்தை இடமாற்றப்படுமா? பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் இயங்கும் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். –அசோக், பெ.பொன்னேரி. சுகாதார வளாகம் தேவை பெண்ணாடம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் சுகாதார வளாகம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – வெங்கடேசன், பெண்ணாடம். விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரையில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. –மணி, விருத்தாசலம்